ADDED : ஜூன் 06, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அருகே வீட்டுமனை பிரச்னையில் சகோதரரை தாக்கிய, இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே அற்பிசம்பாளையத்தை சேர்ந்தவர் விநாயகம், 56; விவசாயி. இவர், தனது பூர்வீக வீட்டு மனை பகுதியில், வீடு கட்டுவதற்கான பணியை தொடங்கியுள்ளார்.
அண்ணன் தம்பிகளிடையே இட பிரச்னை இருந்ததால், கடந்த 2ம் தேதி அவரது சகோதரர்களான தணிகாசலம், 52; ஜெயச்சந்திரன், 60; ஆகியோர் வந்து, வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் விநாயகத்தை திட்டி, தாக்கியுள்ளனர்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தணிகாசலம், ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.