ADDED : ஜன 01, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் கடையில் குட்கா பதுக்கி விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சுபஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, பழைய சிந்தாமணி சாலையில் உள்ள அதே பகுதியை சேர்ந்த வரதராஜன், 42; என்பவரது பெட்டி கடையில் சோதனையிட்டனர்.
அப்போது, அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 2300 குட்கா பாக்கெட்டுகள், பீடி கட்டுகள், சிகரெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, தடை செய்யப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்த விழுப்புரம் டவுன் போலீசார், வரதராஜனையும், பாகர்ஷா வீதியை சேர்ந்த அன்வர்அலி, 56; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து, பணம் ரூ.2,000, செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

