/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது
/
ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது
ADDED : நவ 16, 2025 03:37 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆன் லைன் லாட்டரி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, காகுப்பம் பிள்ளையார் கோவில் தெரு உள்ள பங்க் கடை அருகே ஆன்லைன் லாட்டரி விற்றவர்களை, போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். அதே பகுதியை சேர்ந்த அர்ஜூணன் மகன் பந்தல்ராஜ்,37; மகாராஜபுரத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ரவிச்சந்திரன், 46; பில்லுாரை சேர்ந்த கார்த்திக், 34; ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், ஆன்லைன் லாட்டரியில் விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து, மூன்றுபேர் மீதும் வழக்கு பதிந்த தாலுகா போலீசார், பந்தல்ராஜ், ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து, 3 மொபைல் போன்கள், ஆன் லைன் லாட்டரிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

