sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

/

 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது


ADDED : மார் 04, 2026 05:19 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தி, மத்திய நுண்ணறிவு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மதுரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை போலீசார் நிறுத்தி, சோதனை செய்தனர்.

அவர், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், செஞ்சி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார்,30; என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரிந்தது. இவரின் பைக் மற்றும் 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், போலீசார் மதுபாட்டில்கள் வாங்கி வந்த கடையின் காசாளர் புதுச்சேரி மாநிலம், திருக்கனுாரை சேர்ந்த ரங்கநாதன் மகன் பாலமுருகன்,45; என்பவரையும், ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us