/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் மது அருந்திய தகராறு: 2 பேர் கைது
/
சாலையில் மது அருந்திய தகராறு: 2 பேர் கைது
ADDED : ஜன 17, 2025 06:35 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரோட்டில் அமர்ந்து மது அருந்திய தகராறு தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கல்லப்பட்டு புதிய காலனியைச் சேர்ந்தவர் ஆனந்த பிரியன், 21: இவரது நண்பர் மூங்கில் பட்டை சேர்ந்த சுருதி ,18; புதுச்சேரி மாநிலம் உறுவையாறு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், 22: கவியரசன், 21 ஆகிய நான்கு பேரும் கடந்த 14ம் தேதி இரவு தென்னவராயன்பட்டு ஏரிக்கரையில் பைக்குகளை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு சாலையோரம் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த தென்னவராயன் பட்டை சேர்ந்த பிரகாஷ், 22; என்பவர் நடு ரோட்டில் நிறுத்தி இருந்த பைக்கை ஓரமாக எடுக்குமாறு கூறியபோது வாய் தகராறு ஏற்பட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது நண்பர்கள் பாலாஜி,24; தருண் ராஜ்,19 ; ஆகியோருடன் வந்து மது அருந்திய நான்கு பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆனந்த பிரியன், சுருதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.இருவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது பற்றிய புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார், பிரகாஷ் ,தருண் ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.