ADDED : ஏப் 11, 2026 10:09 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வழக்கில் கைதான 2 வாலிபர்கள் போலீசார், குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் போலீசார், வி.மருதுார் ஏரிக்கரை அருகே கடந்த மார்ச் 12ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது, கஞ்சா பொட்டலங்களோடு நின்றிருந்த விழுப்புரம் கே.கே., ரோடு, அண்ணா நகரைச் சேர்ந்த ரவி மகன் வானவராயன், 25; சுப்ரமணி மகன் மணி, 26; ஆகியோரை கைது செய்து, 1.800 கி.கி., கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சாய் பிரனீத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், வானவராயன், மணி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை நேற்று விழுப்புரம் டவுன் போலீசார், கடலுார் மத்திய சிறைசாலை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
