/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் எதிரில் ஆபாச செய்கை கொத்தனார் உட்பட இருவர் கைது
/
பெண் எதிரில் ஆபாச செய்கை கொத்தனார் உட்பட இருவர் கைது
பெண் எதிரில் ஆபாச செய்கை கொத்தனார் உட்பட இருவர் கைது
பெண் எதிரில் ஆபாச செய்கை கொத்தனார் உட்பட இருவர் கைது
ADDED : ஜன 25, 2024 05:23 AM
வானுார் : ஆரோவில் அருகே தொழிலாளியை தாக்கி, பெண் முன்பு, நிர்வாணப்படுத்தி காட்டிய கொத்தனார் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் லட்சுமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அய்யனார், விக்டர் ஆகியோர் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரையும், கோவிந்தராஜ், வெளி மாநிலத்திற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.
இதில், அய்யனார் வேலைக்கு சென்று, பாதியிலேயே வீட்டிற்கு திரும்பி விட்டார். இதனால் அவருக்கு பயணப்படி ரூ. 4 ஆயிரம் தரவில்லை. இந்த பணத்தை கேட்டு, நேற்று முன்தினம், அய்யனார், அவருடன் அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் ஆகியோர் கோவிந்தராஜியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது கோவிந்தராஜியின் மகள் சித்ரா, அவரது கணவர் பலராமன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களிடம் கோவிந்தராஜ் எங்கே எனக்கேட்டுள்ளனர். அவர் வீட்டில் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அய்யனார், ராஜமாணிக்கம் ஆகிய இருவரும், பலராமனை ஆபசமாக பேசி தடியால் தாக்கினர். .
பின், சித்ரா முன்னிலையில், அய்யனார் லுங்கியை அவிழ்த்து ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
புகார் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து அய்யனார், 41; ராஜமாணிக்கம், 38; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.