/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பறவைகளை வேட்டையாடிய இருவருக்கு அபராதம்
/
பறவைகளை வேட்டையாடிய இருவருக்கு அபராதம்
ADDED : ஆக 08, 2025 02:04 AM
விழுப்புரம்: பறவைகளை வேட்டையாடிய இரு நரிக்குறவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
விழுப்புரம் வனத்துறை பறக்கும் படையினர், நேற்று காலை வளவனுார் அருகே ரோந்து சென்றபோது, சொர்ணாவூர் பகுதியில் பறவைகளை வேட்டையாடியதாக நரிக்குறவர்கள் இருவரை பிடித்தனர்.
இறந்த குள்ளிமூக்கு வாத்துகளை அவர்கள் கையில் வைத்திருந்ததால், அவர்களை பிடித்து வந்து, விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்த நரிக்குறவர்கள் சிலர் திரண்டு வந்து, அவர்களை விடுவிக்க வேண்டும் என முறையிட்டனர்.
இதனையடுத்து, வனத்துறை காவலர்கள் நடத்திய விசாரணையில், அவர்கள் வாத்துகளை வேட்டையாடவில்லை, விலைக்கு வாங்கி வந்து விற்றதாக தெரிவித்தனர்.
இதனால், இரண்டு நரிக்குறவர்களையும் எச்சரித்த வனத்துறையினர், அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.