UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 07:18 PM

விழுப்புரம்: மின்மாற்றியில் ஆயில், காப்பரை திருடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிளியனுார் இளமின் பொறியாளர் சிவகிருஷ்ணன்,52; இவர், கடந்த ஆக., 22ம் தேதி தனது அலுவலகத்திற்கு உட்பட்ட ஆதனப்பட்டு கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் ஆய்வு செய்தார்.
அப்போது, அதில், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ஆயில் மற்றும் காப்பர் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர், கிளியனுார் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அதே போல், கிளியனுார் உதவி மின் பொறியாளர் (பொறுப்பு) சிவா, கடந்த செப்., 16ம் தேதி, தென்சிறுவளுர் மின்மாற்றியில் மின்சாரம் வரவில்லை என்ற தகவலின் பேரில், அங்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, இந்த மின்மாற்றியை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அதில் உள்ள ரூ.25 ஆயிரம் மதிப்பிலான ஆயில், காப்பரை திருடியது தெரியவந்தது.
இவர் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த இரு மின்மாற்றியிலும் ஆயில், காப்பரை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டிவனம், கோபாலபுரத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் ஏழுமலை மகன் அஜித்,24; பாபு மகன் சூர்யா,24; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
