ADDED : ஜூன் 01, 2025 11:12 PM
விழுப்புரம்: கோவில் திருவிழா சுவாமி ஊர்வலத்தில் டிரம்ஸ் அடித்த தகராறில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வளவனுாரை சேர்ந்தவர் கண்ணன் மகன் கரண், 23; இவர், நேற்று முன்தினம், மாரியம்மன் கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலத்தின்போது, டிரம்ஸ் அடித்தவர்களிடம், தங்கள் வீட்டின் அருகில் அடிக்க வேண்டாம் என கூறினார். இதனால், ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன், 30; பிரசன்னகுமார், 29; கிருபாநிதி, 37; ஆகியோர் கரணை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதை தொடர்ந்து, கரண், சந்தோஷ், 22; தவசி, 24; ஆகியோர் சிவஞானம் மனைவி துர்கா, 31; மற்றும் கிருபாநிதியை திட்டி தாக்கினர். வளவனுார் போலீசார் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிந்து, மனோகரன், பிரசன்னகுமார், கிருபாநிதி, கரண், சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.