/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் கார் மோதி விபத்து தி.மு.க., கிளை செயலாளர் உட்பட இருவர் பலி
/
விழுப்புரத்தில் கார் மோதி விபத்து தி.மு.க., கிளை செயலாளர் உட்பட இருவர் பலி
விழுப்புரத்தில் கார் மோதி விபத்து தி.மு.க., கிளை செயலாளர் உட்பட இருவர் பலி
விழுப்புரத்தில் கார் மோதி விபத்து தி.மு.க., கிளை செயலாளர் உட்பட இருவர் பலி
ADDED : அக் 26, 2025 03:22 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கார் மோதி, தி.மு.க., கிளைச் செயலாளர் உள்ளிட்ட இருவர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த வேளியம்பாக்கத்தை சேர்ந்தவர் ராமதாஸ், 35; தி.மு.க., கிளை செயலாளர். இவர், நேற்று மதியம் 3:30 மணியளவில், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை, இந்திரா நகர் மேம்பாலம் சர்வீஸ் சாலையோரம் தனது நண்பர்களான வி.பாளையம் தீனா, 36; கொட்டப்பாக்கத்துவேலி திருவேங்கடம், 45; ஆகியோருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, மாம்பழப்பட்டு சாலையிலிருந்து, சர்வீஸ் சாலை நோக்கி வந்த மகேந்திரா பொலிரோ கார், சாலையோரம் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில், ராமதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தீனா, திருவேங்கடம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீனா இறந்தார்.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும்போலீசார், விபத்தில் இறந்த ராமதாசின் உடலை மீட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், காரை ஓட்டி வந்த நபர், விழுப்புரம் அடுத்த கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் நரேந்திரன், 35;என்பதும், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட மனைவியை பார்க்க காரில் சென்றுள்ளார்.
வழியில் சர்வீஸ் சாலையில் திரும்பியபோது விபத்து ஏற்படுத்தியதும், அச்சத்தில் தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் நரேந்திரன் மீதுவழக்கு பதிந்ததோடு, விபத்தில் இறந்த ராமதாஸ் மீது பல்வேறு மோதல் வழக்குகள் உள்ளதால், சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

