/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் இருவர் கைது
/
போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் இருவர் கைது
ADDED : டிச 29, 2024 06:25 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோஷணை சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் நேற்று மாலை ஆஸ்பிட்டல் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காஸ் குடோன் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.
இதில் அவர்களிடம் வ100 போதை மாத்திரைகள், 6 ஊசிகள், இருந்தது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் மேலும் விசாரித்ததில் திண்டிவனம் ரோஷணை பாட்டை ஜான்பஷா மகன் சுல்தான், 20; திண்டிவனம் கிடங்கல்(2) அமரர் அண்ணா தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் ஆகாஷ், 23; எனத் தெரியவந்தது.
ரோஷணை போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.