/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் கம்பத்தை தொட்ட இருவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
/
மின் கம்பத்தை தொட்ட இருவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
மின் கம்பத்தை தொட்ட இருவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
மின் கம்பத்தை தொட்ட இருவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
ADDED : டிச 05, 2024 11:41 PM

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த செ.கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ், 35; விவசாயி. இவரது உறவினர் வி.பாஞ்சாலத்தை சேர்ந்தவர் தீனதயாளன், 21; முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை 5:00 மணிக்கு சுரேஷ்ராஜ் தன் வயலில் மரத்தில் கட்டியிருந்த பசு மாட்டை அவிழ்க்க முயன்ற போது, அருகிலிருந்த மின்கம்பத்தின் ஸ்டே கம்பியை பிடித்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.
உடனிருந்த தீனதயாளன், அவரை துாக்க முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் மயங்கினார்.
அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்ற போது, இருவரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.