/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுாதனமாக மதுபானங்கள் கடத்தல் சரக்கு வாகனத்தோடு இருவர் கைது
/
நுாதனமாக மதுபானங்கள் கடத்தல் சரக்கு வாகனத்தோடு இருவர் கைது
நுாதனமாக மதுபானங்கள் கடத்தல் சரக்கு வாகனத்தோடு இருவர் கைது
நுாதனமாக மதுபானங்கள் கடத்தல் சரக்கு வாகனத்தோடு இருவர் கைது
ADDED : ஜன 10, 2024 11:08 PM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வாகனத்தில் நுாதன முறையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் மதுபாட்டில்கள் கடத்துவதாக விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.
அதன் பேரில், மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், சப்-இன்ஸ்பெக்டர் இனாயத்பாஷா மற்றும் போலீசார், விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை, பூத்தமேடு சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, அவ்வழியே வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின் பேரில், நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பின்புறத்தில் பயன்படுத்திய இளநீர் கழிவுகள் இருந்தது.
சந்தேகமடைந்த போலீசார், அந்த இளநீர் கழிவுகளை அப்புறப்படுத்தி பார்த்த போது அதன், அடியில் 40 அட்டை பெட்டிகளில் 2,500 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின், சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், விழுப்புரம், வி.மருதுாரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பரத்,21; பொய்யப்பாக்கத்தை சேர்ந்த வீரப்பன் மகன் விஷ்ணுதேவ்,23; என்பது தெரியவந்தது.
இவர்கள், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.
பின் பரத், விஷ்ணுதேவ் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.4.50 லட்சம் மதிப்பிலான சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.