/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீசாரை தாக்கிய 2 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்'
/
போலீசாரை தாக்கிய 2 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜன 08, 2025 08:30 AM

விழுப்புரம்: ழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டகுப்பத்தை சேர்ந்த ராயர் மகன் அப்பு (எ) ஜவகர்,24; சோதனைகுப்பத்தை சேர்ந்தவர் பகிர்முகமது மகன் அகமது ஹஸைன்,25; இவர்கள், கடந்த டிச.7ம் தேதி, இ.சி.ஆரில் கத்தியுடன் நின்று கொண்டு, பொதுமக்களை மிரட்டினர்.
அவர்களை பிடித்து விசாரித்த, கோட்டக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசாரை தாக்கி, கொலை செய்ய முயன்றனர்.
இருவரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து, கடலுார் சிறையில் அடைத்தனர்.
ரவுடிகளான இருவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன் பரிந்துரையை ஏற்று கலெக்டர் பழனி, இருவரையும் குண்டாசில் அடைக்க உத்தரவிட்டார்.
சிறையில் உள்ள, அப்பு, அகமதுஹஸைனிடம் குண்டாசில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.

