/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை; விழுப்புரத்தில் துணிகரம்

ADDED : அக் 14, 2024 08:27 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒரே இரவில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 47; இவர், விழுப்புரத்தில், திருச்சி சாலையில், தந்தை பெரியார் நகரில் சக்தி முருகன் டீசல் ஒர்க்ஸ் கடை வைத்துள்ளார்.
நேற்று காலை 9:00 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
மேலும், கடையிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அழிப்பதற்கு, அதன் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர்
மேலும் ஒரு கடையில் கொள்ளை
பெரியார் நகரைச் சேர்ந்த பிரதாப், 44; இவர், அப்பகுதியில் முருகவேல் ஸ்டீல்ஸ் என்ற சிமென்ட் கடை வைத்துள்ளார். இவரது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே கல்லா பெட்டியில் வைத்திருந்த 85 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிவகுமார் மற்றும் பிரதாப் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.