/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : ஏப் 07, 2025 06:43 AM

திண்டிவனம்; திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு வரும் சாலையில், இரு சக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திண்டிவனம் மேம்பாலம் காமராஜர் சிலை எதிரே உள்ள சாலையில் இந்தியன் வங்கி, மருத்துவமனை உள்ளது. இந்த குறுகிய சாலை வழியாக இந்திராகாந்தி பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன.
போக்குவரத்து நெரிசலான இந்த பகுதியில், சாலையை அடைத்துக்கொண்டு இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் சுலபமாக செல்லமுடியவில்லை. இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொது மக்களை எரிச்சல் அடையச் செய்கிறது.
போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதால், தொடர்ந்து அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., நேரில் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.