/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணம் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது
/
பணம் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது
பணம் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது
பணம் பிரச்னையில் பெண்ணை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது
ADDED : மே 07, 2025 02:07 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் பணம் பிரச்னையில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் முத்தோப்பு அகரம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் மனைவி உமாமகேஸ்வரி, 39; இவரது மகன் தயாளனிடம் சித்தேரிக்கரையை சேர்ந்த தரணிதரன், 21; என்பவர் கடந்த ஒரு வாரம் முன் 1,000 ரூபாய் கடன் வாங்கினார். கடன் தொகையை திருப்பி தயாளன் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த தரணிதரன் மற்றும் அவரது நண்பர்கள் முத்தோப்பு விக்கி, 22; நிர்மல்குமார், 22; ஆகியோர் சேர்ந்து தயாளனை வீடு புகுந்து தாக்கினர்.
தடுக்க வந்த அவரது தாய் உமாமகேஸ்வரியை திட்டி மின் விசிறியை சேதப்படுத்தினர்.
விழுப்புரம் டவுன் போலீஸ் தரணிதரன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து, தரணிதரன், நிர்மல்குமாரை கைது செய்தனர்.