/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சில் துப்பாக்கியுடன் சென்ற ஜம்மு வாலிபர்கள் இருவர் கைது
/
பஸ்சில் துப்பாக்கியுடன் சென்ற ஜம்மு வாலிபர்கள் இருவர் கைது
பஸ்சில் துப்பாக்கியுடன் சென்ற ஜம்மு வாலிபர்கள் இருவர் கைது
பஸ்சில் துப்பாக்கியுடன் சென்ற ஜம்மு வாலிபர்கள் இருவர் கைது
ADDED : பிப் 04, 2024 04:34 AM
விழுப்புரம் : பஸ்சில் துப்பாக்கிகளுடன் சென்ற ஜம்மு மாநில வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்ற கர்நாடகா அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், இருவர் உரிமம் இன்றி, டி.பி.எம்.எல்., - எஸ்.பி.எம்.எல்., ரகங்களை சேர்ந்த 2 பிஸ்டல் துப்பாக்கிகள் தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்தனர். துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் இல்லை.
விசாரணையில், ஜம்மு மாநிலம், குந்தா கிராமத்தைச் சேர்ந்த ரஜிந்தர் குமார் மகன் சுரேஷ்குமார், 23; ஜீட்குமார் மகன் முகேஷ்குமார், 23; என தெரிய வந்தது. மேலும், புதுச்சேரியில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியில் பணி புரிந்த இவர்களின் சகோதரர்கள் இருவர், தங்களின் துப்பாக்கிகளை அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்துவிட்டு சொந்த ஊரானா ஜம்முவிற்கு சென்று விட்டதாகவும், அதனை வேறு வேலையாக புதுச்சேரிக்கு வந்த இவர்கள், அந்த துப்பாக்கிகளை ஜம்முவிற்கு கொண்டு செல்வதாகவும், அதற்கான உரிமம் ஜம்முவில் உள்ள சகோதரர்களிடம் உள்ளதாக கூறினர்.
உரிமம் வைத்திருப்போர் வராமல் தோட்டாக்களுடன் துப்பாக்கிகளை எடுத்து வந்த குற்றத்திற்காக வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.