ADDED : ஜன 21, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் 12 மணி அளவில் உச்சிகால பூஜை நடைபெற்றது.
முன்னதாக பாலாம்பி அம்மனுக்கும், பாலேஸ்வருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து, வாழைப்பூ கலச பூஜை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கடன் நிவர்த்தி மற்றும் நேர்த்திக்கடன் பூஜைகள் நடைபெற்றது.
சிறப்பு பூஜையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சம்பத், அர்ச்சகர் கோபி செய்திருந்தனர்.

