/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உதயநிதி பிறந்தநாள் விழா மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு
/
உதயநிதி பிறந்தநாள் விழா மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு
உதயநிதி பிறந்தநாள் விழா மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு
உதயநிதி பிறந்தநாள் விழா மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : நவ 25, 2025 04:48 AM

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை ஒரு மாதத்திற்கு கொண்டாட வேண்டும் என மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., கேட்டு கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
தி.மு.க., இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதியின் 49வ து பிறந்த நாள் விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டா ட வேண்டும். அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிளைகளிலும் இம்மாதம் 27ஆம் தேதி துவங்கி டிசம்பர் மாதம் முழுவதும் கட்சி கொடியேற்றி நலத்திட்டங்கள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும்.
ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம், மரக்கன்று நடுவது, ஆதரவற்றோர், முதியோர், இல்லங்களில் உள்ள முதியவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு உடைகள் அந்தந்த பகுதியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

