/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நா.த. கட்சியின் மா.செ., ராஜினாமா
/
நா.த. கட்சியின் மா.செ., ராஜினாமா
ADDED : அக் 09, 2024 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துாரை சேர்ந்த பூபாலன், நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இவர், நேற்று தனது மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், 'கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கின்றேன்.
கட்சியில் உரிய மரியாதை இல்லை. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது, எவருக்கும் பதில் சொல்ல முடியாது. தன் இஷ்டபடி தான் செய்வேன் என்று கூறியதாலும், அவர் மீதுள்ள அதிருப்தி காரணமாகவும், கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

