/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எதுவுமே செய்ய முடியல... பதவி மட்டும் எதுக்கு? வி.சி., பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்ய முடிவு

ADDED : ஜூலை 08, 2025 12:17 AM
நான்கு ஆண்டுகளாக வார்டு வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் வைக்காததால், விழுப்புரம் நகராட்சி வி.சி., பெண் கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகள் உள்ளன. 32வது வார்டில், வி.சி., கட்சியை சேர்ந்த வித்தியசங்கரி பெரியார் கவுன்சிலராக உள்ளார். அவர் நகராட்சி, தனது வார்டுக்கு எந்த பணியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பி வந்தார். இதனால், வெறுத்துப்போன அவர், மக்களுக்கு நல்லதை செய்ய பதவிக்கு வந்தோம்.
ஆனால், நகராட்சி அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. வார்டுக்கு நல்லதை செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் பதவி மட்டும் எதற்கு என தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அக்கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'கவுன்சிலராக பதவியேற்று எனது வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். கவுன்சிலர்கள் கொடுக்கும் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுகிறது. ஆனால், டெண்டர் வைப்பதில்லை.
எனது வார்டில் 5 இடங்களில் சாலை வசதி, மினி டேங்க் சீரமைப்பு பணி, 3 தெருக்களுக்கு பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. 4 ஆண்டுகளாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், வி.சி., கட்சி தலைமைக்கும், பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., ஆகியோரிடம் எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளேன். தலைமை முடிவுக்காக காத்திருக்கிறேன்' என்றார்.