ADDED : பிப் 26, 2024 05:44 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின் பகுதியில் கமலாகண்ணப்பன் நகரில், பாதாள சாக்கடை திட்டம் முடிந்து பயன்பாட்டில் உள்ளது.
நகரில் இருந்து கலெக்டர் அலுவலகம் பகுதிக்கு வரும் மெயின் ரோடில் மேன்ஹோல் மேல் மூடி பகுதி உடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் தெரியாமல் அந்த பள்ளத்தில் தடுமாறி விழும் நிலை உள்ளது. அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
