sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் இழுபறி!: 16 ஆண்டாகியும் முடிந்தபாடில்லை

/

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் இழுபறி!: 16 ஆண்டாகியும் முடிந்தபாடில்லை

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் இழுபறி!: 16 ஆண்டாகியும் முடிந்தபாடில்லை

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் இழுபறி!: 16 ஆண்டாகியும் முடிந்தபாடில்லை


ADDED : ஜன 11, 2024 04:12 AM

Google News

ADDED : ஜன 11, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், பாதாள சாக்கடைப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இத்திட்டம் துவங்கி, 16 ஆண்டுகளாகியும் பணி முழுமையடையவில்லை.

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை சேகரிக்கும் பொருட்டு 14 ஆயிரத்து 150 குடியிருப்புகளை இணைத்து 165. 68 கி.மீ., நீளத்திற்கு ரூ. 263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்காடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் 76 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் மூலம் 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 268 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் சாலமேடு பகுதியில் ரூ. 26. 8 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதியதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்ற பகுதிகளில் ஏற்ப்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், பாதாள சாக்கடைப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், ஆண்டுக் கணக்கில் இழுபறியாக உள்ளது.

இதையடுத்து, நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து, சேர்மன், கமிஷ்னர் தலைமையில் அடிக்கடி, ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.

விழுப்புரம் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்திட, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் திணறி வருகின்றனர். மேலும், மழைக் காலம் துவங்கிவிட்டால், பாதாள சாக்கடை பணிகளை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையடையாததால், ரூ.27.5 கோடி மதிப்பிலான தார் சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள குழந்தைவேல் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத நிலை நீடிக்கிறது. விழுப்புரம் நகராட்சியில், கடந்த 2007 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் துவங்கிய இத்திட்டம், 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டது. திட்ட கால அளவை தாண்டி, 16 ஆண்டுகளாகியும், பணிகள் நிறைவடையாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us