/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு மையத்தில் ஒன்றிய சேர்மன் ஆய்வு
/
சத்துணவு மையத்தில் ஒன்றிய சேர்மன் ஆய்வு
ADDED : ஜூலை 26, 2025 03:44 AM

செஞ்சி : ஊரணிதாங்கல் சத்துணவு மையத்தில் ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார்.
செஞ்சி ஒன்றியம், ஊரணிதாங்கல் ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு தரம், சுவையை ஆய்வு செய்தார்.
உணவு கூடத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என சத்துணவு ஊழியர்களை அறிவுறுத்தினார். ஆய்வின் போது முன்னாள் ஊராட்சி தலைவர் தன்ராஜ், தலைமை ஆசிரியர் செல்வகுமாரி, உதவி ஆசிரியை திலகவதி, சத்துணவு அமைப்பாளர் சுகுணா, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி கதிரவன், இளைஞர் அணி செந்தில் உடனிருந்தனர்.