/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுாரில் ஒன்றிய குழு கூட்டம்
/
மேல்மலையனுாரில் ஒன்றிய குழு கூட்டம்
ADDED : ஜன 24, 2025 11:48 PM

அவலுார்பேட்டை; மேல்மலையனுார்   ஒன்றிய குழு கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேல்மலையனுாரில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சையத்முகமத் முன்னிலை வகித்தனர்.
மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு கருவிகள் பயன்படுத்தியுள்ளதை  அகழாய்வில் அறிவியல் பூர்வமாக நிருபித்து காட்டிய நிகழ்கை அறிவித்த   முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில்  தாசில்தார் தனலட்சுமி,   துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கலா, ஷாகினர்ஷத், ஷியாமளா, கார்த்திக், முரளி, துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

