
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி:  விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க   ஒன்றிய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய அலுவலகத்தில் நடந்த  கூட்டத்திற்கு  சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார். துணை சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ.,  சையது முகமது ,நாராயணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  மேலாளர் கலைவாணி வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.
இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் கடந்த, 2022-23 ம் ஆண்டில் நிலுவையிலுள்ள  வளர்ச்சி திட்ட மற்றும் கலைஞர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றிய பொறியாளர்கள் குமரன், நடராஜன் ,முருகன், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் பாபு, வசந்தி , சுந்தர்ராஜன், கலைவாணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

