/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் இல்ல திருமண வரவேற்பு விழா
/
பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் இல்ல திருமண வரவேற்பு விழா
பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் இல்ல திருமண வரவேற்பு விழா
பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் இல்ல திருமண வரவேற்பு விழா
ADDED : பிப் 13, 2024 05:32 AM

செஞ்சி: விழுப்புரம் மாவட்ட பா.ம.க.,. அமைப்பு செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில், கட்சித் தலைவர் அன்புமணி மணமக்களை வாழ்த்தினார்.
விழுப்புரம் மாவட்ட அமைப்பு செயலாளர், வல்லம் ஒன்றிய கவுன்சிலர், கோபால் - கவுசல்யா இல்ல திருமண வரவேற்பு விழா செஞ்சியில், வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார்.
விழாவில், முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் மூர்த்தி, முன்னாள் எம்.பி.,க்கள் துரை, தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான், பா.ம.க., தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகுமார், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி, தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார்.
ஒன்றிய சேர்மன்கள் வல்லம் அமுதா ரவிக்குமார், செஞ்சி விஜயகுமார், மேல்மலையனுார் கண்மணி நெடுஞ்செழியன், மயிலம் லோகேஸ்வரி மணிமாறன், நிர்வாகிகள் மணிமாறன், ராஜேந்திரன், பெருமாள், ஜெயக்குமார், சேட்டு, சின்னத்தம்பி, அருண்மொழி தேவன், முருகன், திருமலை, விஜய் சாரதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பா.ம.க., நிர்வாகிகள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.