/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தும்பூர் பகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் உறுதி
/
தும்பூர் பகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் உறுதி
தும்பூர் பகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் உறுதி
தும்பூர் பகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் உறுதி
ADDED : ஜன 19, 2024 07:38 AM

விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் ஒன்றிய கவுன்சிலுக்குட்பட்ட கிராமங்களில் அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் என ஒன்றிய கவுன்சிலர் செல்வம் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தும்பூர், தாங்கல், அசோகபுரி, பூங்குணம், பம்பாதிரிப்பேட்டை, கஸ்பா காரணை ஆகிய 6 ஊராட்சிகளில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி ஆகியோரின் பரிந்துரையின் பேரில், கஸ்பாகாரணை பழைய காலனியில் 3 லட்சம் ரூபாய், பம்பாதிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலைகள், தாங்கலில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால், நாகம்மன் கோவிலுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலும், இருளர் குடியிருப்பில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலும் குடிநீர் பைப் லைன், பால்வாடிக்கு 13.50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அரசு ஆரம்பப் பள்ளிக்கு 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடமும். குளக்கரை தெருவில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் வசதியும் ஏற்படுத்தியுள்ளேன்.
தும்பூரில் விவசாயிகள் நலன் கருதி 5.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கதிரடிக்கும் களம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 5.17 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அரசு ஆரம்ப பள்ளியில் 2.00 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கழிவறை, தும்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் வாய்க்கால், காலனி மாரியம்மன் கோவில் தெருவில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, தாங்கல் குளக்கரை தெருவில் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் சுத்தகரிப்பு நிலையம்.
காலனி பகுதியில் ஜல்ஜீவன் மிஷனில் 16.75 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, அசோகபுரி ஆரம்ப பள்ளி கட்டடம் 2.17 லட்சம் ரூபாய் மதிப்பில் புணரமைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.
மேலும், எனது கவுன்சிலுக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலுள்ள அங்கன்வாடி மையங்களை 3.00 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்துள்ளேன்.
கடந்த 2 ஆண்டுகளில் ஒரு கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மக்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுத்துள்ளேன். வரும் காலங்களில் தேவையான அடிப்படை வசதிகளை அரசிடம் இருந்து கேட்டு பெற்று செய்து தன்னிறைவு பெறச் செய்திடுவேன்.
இவ்வாறு ஒன்றிய கவுன்சிலர் செல்வம் கூறினார்.

