/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.கே.டி., சாலைப் பணி விரைந்து முடிக்கப்படும் எம்.எல்.ஏ.,வுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

ADDED : அக் 05, 2024 11:29 PM
மயிலம்: வி.கே.டி., சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் கடந்த செப்டம்பர் 10ம் தேதி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியை டில்லயில் சந்தித்து அளித்த மனு:
வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலைப் பணி பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. குறிப்பாக விக்கிரவாண்டியிலிருந்து சேத்தியாதோப்பு வரை சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இந்த பகுதியில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பது முற்றிலும் நிறுத்த வேண்டும்.
இதேபோன்ற, திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலையையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரிடமிருந்து அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் 'என்.எச்., 36, 45சி'யில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.