ADDED : ஜூலை 31, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியை ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக 5.56 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆய்வு செய்தார். அப்போது திட்ட வரைபடத்தின் உள்ளவாறு பணிகள் நடந்துள்ளதா எனவும், எத்தனை சதவீதம் பணிகள் முடிந்துள்ளன எனவும் பணி மேற்பார்வை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர், ஊராட்சி மன்றத் தலைவர்கள், தி.மு.க., நிர்வாகிகள் அய்யாதுரை, இக்பால் தேவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

