/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளிமேடுபேட்டையில் ஒன்றிய அலுவலகம்: எம்.எல்.ஏ., கோரிக்கை
/
வெள்ளிமேடுபேட்டையில் ஒன்றிய அலுவலகம்: எம்.எல்.ஏ., கோரிக்கை
வெள்ளிமேடுபேட்டையில் ஒன்றிய அலுவலகம்: எம்.எல்.ஏ., கோரிக்கை
வெள்ளிமேடுபேட்டையில் ஒன்றிய அலுவலகம்: எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஏப் 06, 2025 05:35 AM

மயிலம்: மயிலம், வல்லம், ஒலக்கூர் பகுதியில் கிராம ஊராட்சிகளை பிரித்து வெள்ளிமேடுபேட்டையை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என சிவக்குமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசினார்.
மயிலம் சட்டசபை தொகுதியில் நகராட்சியோ, பேரூராட்சியோ இல்லாத காரணத்தால், மயிலம் மற்றும் ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சிகளாகத் தரம் உயர்த்தி தர வேண்டும். மேலும், மயிலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும்.
மயிலத்தில் அரசு கலைக் கல்லுாரி அல்லது தொழில்நுட்பக் கல்லுாரி அமைக்கப்பட வேண்டும்.
மயிலம் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்தைச் சென்றடைய நீண்ட நேரமாகிறது. எனவே, ரெட்டணை அல்லது பெரியதச்சூரில் தீயணைப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும்.
மயிலம் தொகுதியில் வல்லம் ஒன்றியத்தின் கடைசி எல்லைக்குட்பட்ட ஊராட்சிகளிலிருந்து காவல் நிலையம் செல்ல 30 கி.மீ., வரை செல்ல வேண்டியுள்ளது. எனவே, வல்லம் ஊராட்சியில் புதிய காவல் நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
மயிலம் தொகுதியில் விவசாய நிலங்களில் ஏராளமான சவுக்கு மரங்கள் பயிரிடப்படுவதால், தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும். நெடி, கொரலுார், கட்டாஞ்சிமேட்டை தனி ஊராட்சிகளாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.
வல்லம், மயிலம், ஒலக்கூர் ஒன்றியங்களைப் பிரித்து வெள்ளிமேடுபேட்டையில் புதிய ஒன்றிய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். திண்டிவனம், வல்லத்தைப் பிரித்து வெள்ளிமேடுபேட்டையில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு சிவக்குமார் எம்.எல்.ஏ., பேசினார்.

