/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
/
செஞ்சியில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
ADDED : மார் 11, 2026 06:52 AM

செஞ்சி: செஞ்சியில் 5.79 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒன்றிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
செஞ்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 5.79 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து செஞ்சியில் நடந்த விழாவிற்கு கூடுதல் கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி., தரணி வேந்தன் முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் கண்ணன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன்.
விவசாய அணி மாவட்ட தலைவர் கணேசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், பி.டி.ஓ.,க்கள் அமுதவள்ளி, ராமதாஸ், மேலாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் முகமது யாசின்.
அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிகள் கோட்டீஸ்வரன், அய்யாதுரை, ஊராட்சி தலைவர்கள் சங்க நிர்வாகிகள் ரவி, அய்யனார், ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

