/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுங்கசாவடி இயங்கிய இடத்தில் அகற்றாத மண்மேடு, தடுப்பு கட்டையால் விபத்து அபாயம்
/
சுங்கசாவடி இயங்கிய இடத்தில் அகற்றாத மண்மேடு, தடுப்பு கட்டையால் விபத்து அபாயம்
சுங்கசாவடி இயங்கிய இடத்தில் அகற்றாத மண்மேடு, தடுப்பு கட்டையால் விபத்து அபாயம்
சுங்கசாவடி இயங்கிய இடத்தில் அகற்றாத மண்மேடு, தடுப்பு கட்டையால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 08, 2025 04:06 AM

மரக்காணம் : மரக்காணம் - புதுச்சேரி செல்லும் இ.சி.ஆரில் இருந்த அனுமந்தை சுங்கசாவடி அகற்றிய பின் சாலையில் இருந்த மண்மேடுகளை அகற்றாததால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து மரக்காணம் வழியாக புதுச்சேரி செல்லும் இ.சி,ஆரில்., மாமல்லபுரம் வரை நான்கு வழி சாலை உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மாமல்லபுரம் - புதுச்சேரி நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. பாரத் மாலா திட்டத்தின் கீழ் நான்கு வழிசாலையாக தரம் உயர்த்தி, சாலை அமைக்கும் பணியும் துவங்கி உள்ளது.
இதனால் மாநில நெடுஞ்சாலையில் இருந்த சுங்கசாவடிகள் அகற்றப்பட்டது. அதன்படி மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் இருந்த சுங்கசாவடிகள் கடந்த 2023ம் ஆண்டு அகற்றப்பட்டது. சுங்கசாவடியில் இருந்த ஷெட்டு, ஐமாஸ் லைட், ஜெனரேட்டர், அவசர ஊர்தி, அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா உள்பட அனைத்து பொருட்களையும் சுங்கசாவடி நிர்வாகத்தினர் எடுத்து சென்றனர்.
விபத்துக்கள் நடந்தால் கண்காணிப்பதிற்கு சி.சி.டி.வி., கேமரா, ஹைமாஸ் விளக்குகளை கழற்ற வேண்டாம் என மரக்காணம் போலீஸ் கேட்டு கொண்டது. ஆனால், சுங்கசாவடி நிர்வாகம் அனைத்தையும் கழற்றி சென்றனர். சுங்கசாவடி முகப்பு வாயில் வழியாக வரும் வாகனங்கள் தனித்தனியாக சென்று சுங்க கட்டணம் செலுத்த சாலையின் குறுக்கே மண்ணை கொட்டி மூன்று தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த கட்டைகள் அப்புறப்படுத்தாமல் சாலையின் குறுக்கே அப்படியே விட்டு சென்றனர். இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே கட்டை மற்றும் மண்மேடு இருப்பது தெரியாமல் அதன் மேல் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் சாலையின் குறுக்கே இருக்கும் கட்டை, மண்மேடுகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றவேண்டும்.