/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வரப்போகுது லோக்சபா தேர்தல் சுவற்றை பிடி; வெள்ளை அடி
/
வரப்போகுது லோக்சபா தேர்தல் சுவற்றை பிடி; வெள்ளை அடி
வரப்போகுது லோக்சபா தேர்தல் சுவற்றை பிடி; வெள்ளை அடி
வரப்போகுது லோக்சபா தேர்தல் சுவற்றை பிடி; வெள்ளை அடி
ADDED : ஜன 30, 2024 06:31 AM

லோக்சபா தேர்தலையொட்டி, விழுப்புரத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் சுவர் விளம்பரம் மேற்கொள்வதற்கான பணிகளை துவங்கி விட்டனர்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ரகசியமாக கூட்டணி கட்சிகளோடு மேல்மட்ட அளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் அரசியல் பிரமுகர்கள் தாங்கள் விளம்பரம் செய்யும் வழக்கமான சுவர்களை பிடித்து வெள்ளை அடிக்கும் பணிகளை துவங்கி விட்டனர்.
அது மட்டுமின்றி, பொதுவான சுவர்களையும், கணக்கெடுத்து தேர்தல் விளம்பரங்களை செய்வதற்காக அதை தங்களின் கட்சிக்காக முன்கூட்டியே அட்வான்ஸ் புக்கிங்காக பிடித்து வைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள இருபுற சுவர்களிலும், தி.மு.க., - அ.தி.மு.க., விளம்பரம் செய்ததால் இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த சுவர் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு படங்கள் வரையப்பட்டது.
தொடர்ந்து, அந்த படங்கள் மீது சிலர் தங்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கான போஸ்டர்களை ஒட்டினர். இந்நிலையில், மீண்டும் ரயில்வே மேம்பால சுவர்கள் வெள்ளை அடிக்கப்பட்டு தற்போது பளீச்சென காணப்படுகிறது.
இந்த சுவற்றையும் அதிகாரிகளிடம் பேசி பிடித்து தேர்தல் விளம்பரங்களை செய்ய, அரசியல் பிரமுகர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.