ADDED : ஏப் 24, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கண்கொடுத்த விநாயகர் கோவிலில் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை நடந்தது.
கண்டாச்சிபுரம் கண்கொடுத்த விநாயகர் கோவிலில் நேற்று மதியம் அப்பர் என்கிற திருநாவுக்கரசு நாயனாருக்கு குரு பூஜை நடந்தது.
முன்னதாக கண்டுகொடுத்த விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 2:00 மணிக்கு அப்பர் திரு உருவச் சிலைக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு தீபாரதனையும் நடந்தது.
அதைத் தொடர்ந்து திருநாவுக்ரசர் உருவச்சிலை கோவிலுக்குள் உட்பிரகார வலம் வந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி நாராயணசாமி, உபயதாரர் தண்டபானி, ஓதுவார்கள் அருணாசலம், சிவநேசன் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அப்பர் தேவாரப் பாடல்களைப் பாடினர்.