/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருமாள் கோவிலில் 9ம் தேதி வைகாசி விசாக கருட சேவை
/
பெருமாள் கோவிலில் 9ம் தேதி வைகாசி விசாக கருட சேவை
ADDED : ஜூன் 04, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கெடார் அடுத்த அத்தியூர் திருக்கை ஸ்ரீதேவி பூதேவி சுந்தரநாராயண பெருமாள் கோவிலில், வரும் 9ம் தேதி வைகாசி விசாக கருடசேவை நடக்கிறது.
விழாவையொட்டி, 9ம் தேதி காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, காலை 7:00 மணிக்கு சுந்தரநாராயண பெருமாளுக்கு பாலாபிஷேகம் மற்றும் காலை 8:00 முதல் 9:00 மணி வரை சுவாமிக்கு விஷேச திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு பஜனை மற்றும் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.