/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை
/
வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை
வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை
வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 10, 2025 10:11 PM

விழுப்புரம்; கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாகம் நடந்தது.
விழுப்புரம் அருகே கோலியனுாரில் உள்ள ஸ்ரீ பூமி, நிலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று முன்தினம் மூலவர் வரதராஜ பெருமாளுக்கும், உற்சவ பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில், தாயார்களுடன் அருள் பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
லட்சுமிநாராண பெருமாள் கோவில்
வளவனுார் வேதவல்லி தாயார் சமேத லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 8.00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். காலை 10.30 மணிக்கு உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பகல் 11.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது.