ADDED : ஜூலை 28, 2025 02:10 AM

விழுப்புரம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் வைணவ சபை சார்பில், 19 ம் ஆண்டு  வைணவ மாநாடு நடைபெற்றது.
விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னதாக கருடக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வைணவ சபை தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். ஜீயர் சுவாமிகள், மனிதனிடம் ஆன்மீகம் உருவாகும் விதம், குறித்து சொற்பொழிவாற்றினார். மகோஸ்தவங்களின் தாத்பர்யங்கள் பற்றி அரிபிரியா தேவநாதன் கூறினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கான திருப்பாவை ஒப்புவித்தல், மாறுவேட போட்டிகள் நடை பெற்றன. பின், ரங்கநாதன், அத்தங்கி சீனிவாசன், ருக்மணி(எ)அலமேலு ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.  இதில், வைணவத்தை வளர்ப்பது; வைணவ சபையில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்;  என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சபை பொருளாளர் ராமசாமி ராமானுஜதாசன் நன்றி கூறினார்.

