/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளவனுார் ஐ.ஓ.பி., கிளை புதுப்பொலிவுடன் திறப்பு
/
வளவனுார் ஐ.ஓ.பி., கிளை புதுப்பொலிவுடன் திறப்பு
ADDED : டிச 10, 2024 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுாரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், 'ஏசி' உள்ளிட்ட நவீன வசதிகளுடன், புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, சேலம் மண்டல முதன்மை மேலாளர் அருண் துபே தலைமை தாங்கினார். ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி சேர்மன் ராஜா முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் சந்தோஷ்குமாரி சங்கர் வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மணி என்கிற ராஜரத்தினம், குத்து விளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில், வங்கி கிளை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

