/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாகன நிறுத்தமாக மாறியது வளவனுார் பயணிகள் நிழற்குடை
/
வாகன நிறுத்தமாக மாறியது வளவனுார் பயணிகள் நிழற்குடை
வாகன நிறுத்தமாக மாறியது வளவனுார் பயணிகள் நிழற்குடை
வாகன நிறுத்தமாக மாறியது வளவனுார் பயணிகள் நிழற்குடை
ADDED : ஜூன் 28, 2025 02:56 AM

விழுப்புரம் : வளவனுாரில் பயணிகள் நிழற்குடை, இருசக்கர வாகன நிறுத்தமாக மாறியுள்ளது.
விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், வளவனுார் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் தினமும், வளவனுாரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
கடை வீதியில், பஸ்களை சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்க்க, அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடைக்குள் பஸ்கள் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், பயணிகள் நிழற்குடையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து விடுவதால், பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால், பயணிகள் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்தமாக மாறிவிட்டது. இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், இதற்கு நிரந்த தீர்வு காணப்படாமல் உள்ளது.
எனவே, பயணிகள் நிழற்குடையில் நிறுத்தும் இருசக்கர வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பஸ்கள் உள்ளே சென்றுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.