/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திறப்பு விழா
/
வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திறப்பு விழா
ADDED : மார் 18, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திறப்பு விழா நடந்தது.
நிறுவனர் ஞானமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
ஏழுமலை சன்மார்க்க கொடியேற்றினார். திருவருட்பா பாடகர் சீனுவாசன் காப்பகத்தை திறந்து வைத்தார்.
நிர்வாகிகள் கோவிந்தசாமி புருஷோத்தமன், ரவிச்சந்திரன், அண்ணாமலை, தவமணி, டாக்டர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மோட்சராக்கினி நன்றி கூறினார்.