/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வல்லம் ஒன்றிய கூட்டம் செலவினங்களுக்கு ஒப்புதல்
/
வல்லம் ஒன்றிய கூட்டம் செலவினங்களுக்கு ஒப்புதல்
ADDED : செப் 13, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : வல்லம் ஒன்றிய சாதாரண கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ., ராமதாஸ் முன்னிலை வகித்தார். மேலாளர் முத்துவேல் வரவேற்றார். உதவியாளர் சிவானந்தம் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், ஒன்றிய அலுவலகத்தில் நடந்த செலவினங்களுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதிய அலுவலக உதவியாளர், இரவு காவலர் நியமிப்பது குறித்து விவாதம் நடந்தது.
கவுன்சியர்கள் அமிர்தம், கோமதி, பிரபாகரன், விஜயா, கோபால், ராஜேந்திரன், பத்மநாபன், கம்சலா, சிலம்பரசி, கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.