/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழுதரெட்டி - எல்லீஸ்சத்திரம் உயர்மட்ட மேம்பாலம் பணி: கலெக்டர் ஆய்வு
/
வழுதரெட்டி - எல்லீஸ்சத்திரம் உயர்மட்ட மேம்பாலம் பணி: கலெக்டர் ஆய்வு
வழுதரெட்டி - எல்லீஸ்சத்திரம் உயர்மட்ட மேம்பாலம் பணி: கலெக்டர் ஆய்வு
வழுதரெட்டி - எல்லீஸ்சத்திரம் உயர்மட்ட மேம்பாலம் பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 13, 2024 11:33 PM
விழுப்புரம்: விழுப்புரம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வழுதரெட்டி - எல்லீஸ்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் உயர் மட்ட மேம்பாலம் பணியை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வழுதரெட்டி - எல்லீஸ்சத்திரம் பகுதியில், 22.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 கி.மீ., துாரம் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.
இந்த பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பழனி, கூறியதாவது:
பாலம் பணியையொட்டி, அதிகமான வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இணைப்பு சாலையில் தற்காலிக தடுப்பு கட்டைகள் அமைத்து வாகனங்கள் எளிதில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணி குறித்து வாகன ஓட்டிகள் அறியும் வகையில் ஒரு கிலோ மீட்டர் துாரம் முன்பாகவே மாற்றுப் பாதையில் செல்வதற்கான வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் பணி நடப்பதால் ஒளிரும் வகையிலான விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். பணியாளர்களுக்கு ஒளிரும் வகையிலான ஆடைகள், அதிகமான வேகத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி மிதமான வேகத்தில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே மேம்பாலம் முதல் வழுதரெட்டி அணுகுசாலை (கலெக்டர் அலுவலகம் வரை) 1.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 மீட்டர் துாரத்திற்கு கூடுதல் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
இந்த பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.
தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் செல்வராஜ், நிர்வாக பொறியாளர் ரமேஷ் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

