/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
/
வேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 11, 2026 06:14 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே இ.சி.ஆரில் டெம்போட டிராவலர் வேன் மோதி, கம்பிகளை ஏற்றிச்சென்ற பொலிரோ வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரியில் இருந்து சென்னை மார்க்கமாக பொலிரோ வேன் கம்பி ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 6:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. வேனை கோட்டக்குப்பம் காமராஜர் தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், 29; ஓட்டினார்.
இ.சி.ஆரில் சின்னமுதலியார்சாவடி சந்திப்பில், வளைய முயன்றபோது, அதே திசையில் சென்னை மார்க்கமாக சென்ற டெம்போ டிராவலர் வேன், பொலிரோ வேனின் பின் பக்கத்தில் மோதி, ஸ்கூட்டருடன் நின்றிருந்த சின்ன முதலியார்சாவடி எம்.ஜி.ஆர்.நகர் ஜாகீர் உசேன் மனைவி ெஷரின், 46; மீது மோதியதில் அவர் காயம் அடைந்தார். உடன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும், கவிழ்ந்த வேனில் இருந்த டிரைவர் காயமின்றி தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

