ADDED : ஜன 30, 2026 06:09 AM
விழுப்புரம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.ஏ.ஓ., அலுவலகத்தை குடிநீர், கழிவறை மற்றும் இணையதள வசதியோடு கூடிய நவீனமயமாக்கப்பட்ட அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் தாலுகா அலுவலகம் வளாகத்தில், வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் லட்சுமணன், தலைமை நிலைய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மணவாளன், பொருளாளர் அய்யனார், கவுரவ தலைவர் ரபிக், ஒருங்கிணைப்பாளர்கள் நந்தகுமார், முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனுார், வானுார், மரக்காணம், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
