ADDED : ஜன 31, 2026 06:08 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் ஆறு அம்ச கோரிக்கையைவலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் வினோத்குமார் தலைமையில் மாவட்ட சட்ட பிரிவு செயலாளர் லோகநாதன் முன்னிலையில் ஈடுபட்டனர்.
வட்ட தலைவர் மலையான், செயலாளர் அன்புக்கரசு,பொருளாளர் குமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். விக்கிரவாண்டி தாலுகாவில் பணிபுரியும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வி.ஏ.ஓ., அலுவலகத்தினை நவீன கழிவறை வசதி, இண்டர்நெட் வசதியுடன் மாற்றி அமைத்து தர வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் டி..என்.பி.எஸ்.சி., நியமனத்தில் பட்டப்படிப்பு கல்வி தகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகள் வலியறுத்தப்பட்டன.
திண்டிவனம் திண்டிவனம் தாலுகா அலுவகத்தில் கடந்த 28ம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மாவட்ட துணை தலைவர் சீனுவாசன் தலைமையில் நடந்த போராட்டத்தில், வட்டார தலைவர் லோகாதன், நிர்வாகிகள் கமலக்கண்ணன், வீரசேகரன், இந்துமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
