ADDED : ஜன 13, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் வாசவி கிளப் சார்பில் பொங்கல் விழா நடந்தது.
திண்டிவனத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாசவி கிளப் சார்பில் விருட்சகம் முதியோர் இல்லத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு சேலை, வேட்டி என புதிய ஆடைகள் வழங்கப்பட்டது.
வாசவி கிளப் தலைவர் சுரேஷ், உதவி தலைவர் சிவக்குமார், பத்மநாபன், விஸ்வநாதன், மணவளக்களை பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி, வனிதா கிளப் தலைவி கல்பனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பொங்கல் இனிப்பு, பழங்களை வழங்கினர்.