/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
என்.சி.இ.ஆர்.டி., கருத்தரங்கில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு ; வழுதாவூர் ஆசிரியர் கவுரவிப்பு

ADDED : ஜூலை 16, 2025 07:25 AM

கண்டமங்கலம்; தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் டில்லியில் நடந்தது.
பாடசாலைகள் மற்றும் ஆசான் பயிற்சி நிறுவனங்களில் புதிய முயற்சிகள் மற்றும் பரிசோதனைகளை ஊக்குவிக்கும் கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து 4 பேர் உட்பட நாடு முழுதும் இருந்து 26 கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களில், விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் திருமுருகன், வகுப்பறைகளில் கற்றல், கற்பித்தலில் புதிய உத்திகளை கையாள்வது மற்றும் அணுகுமுறையை உறுதிப்படுத்துவது குறித்து, 'கல்வி 4.0 வடிவில் மேட்ரிக்ஸ் மறைவியலின் 21ம் நுாற்றாண்டு பயன்பாடுகள்' என்ற தலைப்பில் தனது திட்ட அறிக்கையை சமர்பித்தார்.
அவருக்கு, என்.சி.இ.ஆர்.டி., திட்ட இயக்குனர் பார்தவாஜ் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.